chandrika (11)பங்களாதேஷ், ரூபவ் சிட்டகொங் நகரில் அமைந்துள்ள பெண்களுக்கான ஆசிய பல்கலைக்கழகத்தின் சர்வதேசக் காப்பாளர் சம்மேளனத்தில் இணைந்து கொள்வதற்கான அழைப்பை, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஏற்றுள்ளார்.

கிழக்கு-மேற்கு ஸ்தாபகப் பங்காண்மையின் வெளிப்பாடாக அமைந்துள்ள இப் பல்கலைக்கழகமான ரூபவ், மத்திய கிழக்கு மற்றும் ஆசிய பிராந்தியத்தைச் சேர்ந்த பெண்களுக்கு சேவை அடிப்படையிலான தலைமைத்துவப் பயிற்சிகளை வழங்கி வருகிறது. இதில் 15 நாடுகளைச் சேர்ந்த அதிதிறமை வாய்ந்த பெண்கள் தமது சேவைகளை வழங்கி வருகின்றனர். பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் புலமைப்பரிசில்கள் காரணமாக பெருமளவான இளம் பெண்களுக்குத் தமது உயர் கல்வியைப் பூர்த்தி செய்து கொள்வதற்கான வாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது. 2008ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட ரூபவ் பல்கலைக்கழகத்தில், இதுவரையில் 53 இலங்கையர்கள் தமது உயர் கல்வியைப் பூர்த்தி செய்துள்ளதுடன், ரூபவ் தற்போது 10 பேர் பயின்று வருகின்றனர்.