karu jayasuriya (5)தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை சுயாதீன உறுப்பினர்களாக ஏற்க முடியாது என, சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

ஏதேனும் கட்சியை அல்லது குழுவின் ஊடாக தேர்தலின் மூலம் வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்கு வந்திருப்பின், குறித்த கட்சி அல்லது குழுவையே பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் எனவும் சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை இந்த விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு இன்று பிற்பகல் மீண்டும் கூடியபோது, தேசிய சுதந்திர முன்னணியை தனியான கட்சியாக அறிவிக்க வேண்டும் என முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் மீண்டும் அமளிதுமளி ஏற்பட்டது.சபாநாயகரின் அறுவுறுத்தல்களை கவனத்திற்கொள்ளாது பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தொடர்ந்தும் சபையில் கருத்துக்களை முன்வைக்க முயன்றதால் சபை நடவடிக்கைகளை தொடரமுடியாத நிலை ஏற்பட்டது. இதன்போது இன்றைய சபை நடவடிக்கைகளில் பிரசன்னமாக தேவையில்லாத உறுப்பினராக தினேஷ் குணவர்தனைவை சபாநாயகi’ அறிவித்ததையடுத்து அவரை சபையிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.