கொழும்பு பல்கலைக்கழக மாணவர் குழுக்கள் இரண்டுக்கிடையே நேற்றிரவு இடம்பெற்ற மோதலைத் தொடர்ந்து கலைப்பீடத்தைச் சேர்ந்த சில மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கலைப்பீடத்தைச் சேர்ந்த 2ஆம், 3ஆம் மற்றும் 4ஆம் வருட மாணவர்களுக்கே வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, பீடாதிபதி கலாநிதி அத்துல ரணசிங்க தெரிவித்தார். ஆனந்த ராஜகருணா மாவத்தையிலுள்ள கொழும்பு பல்கலைக்கழக மாணவர் விடுதியில் வைத்தே இம்மோதல் இடம்பெற்றுள்ளது. இதில் காயமடைந்த நால்வர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாக, வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன. மோதலையடுத்து குறித்த விடுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.