ஐ.நா. மனித உரிமைகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்ற மாட்டேன் என்று ஓர் அரசு தெளிவாகச் சொல்லுமிடத்து, அவர்களுக்கு அதே தீர்மானத்தை நிறைவேற்ற கால அவகாசம் வழங் குவது ஐ.நா. உரிமைகள் சபையின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குட்படுத்தும்.
இவ்வாறு தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள், ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு கூட்டு விண்ணப்பம் செய்துள்ளன. இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்குதல் நீதிக்கான தேடலை நீர்த்துப் போகச் செய்யும். வடக்கு – கிழக்கில் வாழுகின்ற தமிழ் மக் கள் சுயாதீனமான பன்னாட்டு விசாரணையை வலுயுறுத்தி வந்துள்ளனர், தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். இலங்கை அரசு கலப்பு நீதிமன்ற முறையை நிராகரித்தமையானது உள்நாட்டில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதை இன்னும் சாத்தியமற்றதாக்கின்றது. தமிழ் மக்களுக்கு உண்மையான நீதி கிடைக்க வேண்டுமெனில் இலங்கை அரசு இழைத்த பெரிய குற்றங்கள் தொடர் பில் விசாரிக்கத் தனியான பன்னாட்டுத் தீர்ப்பாயம் அமைக்கப்பட வேண்டும்.
அல்லது பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றில் விசாரிக்கப்பட வேண்டும். இது தொடர்பில் முன்னெடுப்புக்களை முடுக்கி விடுதல் ஐ.நா. அமைப்பின் கடமையாகும். அதுவரைக்கும் ஐ.நா. மனித உரிமை மீறல்களை கண்காணிக்க மனித உரிமை செயலாளர் நாயகத்தின் அலுவலகங்கள் வடக்கு-கிழக்கில் உருவாக்குதல் அவசியமாகின்றது – என்று அந்தக் கூட்டு விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.