britishஇலங்கையில் நிலவும் டெங்கு நோய்ப் பரவல் ஆபத்து தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் அந்த நாட்டின் பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் டெங்கு பரவல் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டின் ஜனவரி மார்ச் மாதங்களுக்கு இடையிலேயே 19 ஆயிரத்து 419 பேர், டெங்கு நோயுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனவே இலங்கைக்கு பயணிக்கும் பிரித்தானியர்கள் அவதானமாக செயற்படுமாறு அந்த நாட்டின் குடிவரவுத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.