முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன் திரைசேரி முறிகளை வழங்குதல் தொடர்பாக பரீட்சித்துப் பார்க்கும் மற்றும் புலனாய்வு செய்யும் ஜனாதிபதி புலனாய்வு ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.
மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணைமுறி மோசடி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு ஆஜராகியுள்ளார். மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அவருக்கு ஆணைக்குழுவின் செயலாளரினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்றுகாலை 10 மணியளவில் அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.