மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சத்தியாகிரக போராட்டம் இன்று 18ஆவது நாளாகவும் தொடர்கின்றது. இதுவரை தமது போராட்டத்திற்கு எவ்விதமான தீர்வுகளும் கிடைக்கவில்லையென போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகள் மனவேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
சகல தரப்பினரும் தமக்கு ஆதரவு வழங்கிவரும் நிலையில் அரசு தம்மை கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனையளிப்பதாகவும் பட்டதாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.