கடந்த மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு உடைந்த மட்டக்களப்பு மாவட்டத்தின் கற்பானைக்குளத்தினை பார்வையிடுவதற்குச் சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் அவர்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்களை வழங்கியதோடு, அம் மக்களின் நீண்டகால குறையாக காணப்பட்ட பாலர் பாடசாலைக்குத் தேவையான கற்றல் உபகரணங்கள், கதிரை, மேசைகள் போன்றவற்றின் தேவைப்பட்டை மக்களின் ஊடாக அறிந்து கொண்டார்.
இதற்கமைய கடந்த கால யுத்தத்தால் பாதிக்கப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ள கிராம அபிவிருத்திச் சங்க கட்டிடத்தில் அடிப்படை வசதிகளின்றி இயங்கிவரும் கற்பானைக்குளம் மழலைகள் அறிவாலயம் பாலர் பாடசாலையினை நேரில் சென்று பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் அவர்கள், அச் சிறார்களின் அசௌகரியத்தினையும், அவர்களின் எதிர்கால கல்வியினையும் கருத்திற்கொண்டு கிராம மக்களின் வேண்டுகோளிற்கமைய கற்பானைக்குளம் மழலைகள் அறிவாலயம் பாலர் பாடசாலை மாணவர்களுக்கு தேவையான கதிரைகள், மேசைகள் மற்றும் கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்துள்ளார்.