தோட்ட சேவையாளர்களின் சம்பள உயர்வில் முதலாளிமார் சம்மேளம் அசமந்தப் போக்கை கடைபிடிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தோட்ட சேவையாளர்கள் இன்று பாரிய கவனயீர்ப்பு ஆர்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.
தோட்ட சேவையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஹட்டன் பஸ் தரிப்பிடத்திலிருந்து நகரின் பிரதான வீதியூடாக மணிக்கூடு சந்திவரை பேரணியாக சென்று மணிக்கூண்டு சந்தியில் மேற்படி ஆர்பாட்டம் நடைபெற்றுள்ளது. 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தோட்ட சேவையாளர்களுக்கான சம்பள உடன்படிக்கை நிறைவடைந்தும் மூன்று கட்டப் பேச்சுக்கள் முதலாளிமார் சம்மேளனத்துடன் நடைபெற்ற நிலையில் சரியான தீர்வு கிடைக்காததால் பாரிய கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். 100க்கு 40வீதம் சம்பளவுயர்வு வழங்க கோரிய போதிலும் முதலாளிமார் சம்மேளனம் இணங்க மறுத்துவருவதுடன் 100க்கு 20 வீதம் சம்பத்தை அதிகரித்து தருவதாக தெரிவித்தனர். நாட்டில் நிலவிவரும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில் தமது இயல்பு வாழ்கையை முன்னெடுக்கை முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஆர்பாட்டக்காரர்கள் கூறினர்.
தொடர்ந்து எமது சம்பளவுயர்வு கோரிக்கைக்கு துறைமார் சம்மேளனம் உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்காத நிலையில் எதிர்வரும் 28ம் திகதி முதல் நாடளவிய ரீதியில் தோட்ட சேவையாளர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அகில இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத் தலைவர் தம்மிக்க ஜயவர்தன தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டத்தினால் ஹட்டன் நகரின் பிரதான வீதி போக்குவரத்து பல மணித்தியாலங்கள் ஸ்தம்பிதமடைந்திருந்தது. ஆர்ப்பாட்டத்தில் நுவரெலியா தலவாக்கலை ஹட்டன் கிளைகளைச் சேர்ந்த ஹட்டன் ஆயிரத்திற்கும் தோட்ட சேவையாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.