வவுனியா பிரதேச சம்மேளன பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் நேற்று முன்தினம் காலை 10மணியளவில் வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. தொடர்ந்து நேற்றையதினம் புதிதாக நிர்வாகசபை தெரிவுசெய்யப்பட்டு எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டது.
இவ் பொதுகூட்டத்திற்கு வவுனியா பிரதேச செயலாளர் திரு. உதயராஜா, நிர்வாக உத்தியோகத்தர், பிரதேச கலாசார உத்தியோகத்தர், வவுனியா மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகளான திரு.அபேயசிங்க, திரு.சுகானி, இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கேசவன், இளைஞர் சேவை அதிகாரிகளான ரதித்திரா, திரு.சசிக்குமார், மாவட்ட இளைஞர் சம்மேளன தலைவர் திரு.கிரிதரன் மற்றும் இளைஞர் கழக பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.