cvbcvbvகொழும்பில் பல்கலைக்கழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டமொன்றை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

கொழும்பு லோட்டஸ் வீதியை மறித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமையினாலேயே பொலிஸாரினால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சைட்டம் உள்ளிட்ட தனியார் பல்கலைக்கழகங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.