Ivana_Trumpடொனால்ட் ட்ரம்ப் பற்றிய புத்தகம் ஒன்றை வெளியிட, அவரது முன்னாள் மனைவி இவானா ட்ரம்ப் ஏற்பாடு செய்துவருகிறார்.  ‘ரெய்சிங் ட்ரம்ப்’ என்று பெயரிட்டுள்ள இந்தப் புத்தகத்தில், ‘ட்ரம்ப்பின் வியாபாரம் பற்றியோ, அரசியல் பற்றியோ நான் எதையும் எழுதவில்லை. முழுக்க முழுக்க அவருடனான எனது தனிப்பட்ட வாழ்க்கையையும், எனது மூன்று பிள்ளைகளான இவங்க்கா, எரிக் மற்றும் டொனால்ட் ஜூனியர் ஆகியோரை வளர்த்த விதம் பற்றியுமே எழுதியிருக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார் இவானா.‘எந்தவித ஒளிவுமறைவுமின்றில் இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறேன். கம்யூனிஸப் பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவளான நான், நியூயோர்க் நோக்கிய எனது பயணத்தைப் பற்றியும், டொனால்ட் ட்ரம்ப்புடனான மண வாழ்க்கை பற்றியும், எனது வியாபாரத்தில் நான் அடைந்த வெற்றிகள் பற்றியும் இதில் குறிப்பிட்டிருக்கிறேன்’ என்றும் கூறியுள்ளார் இவானா.

வர்த்தகத் துறையில் ஏற்கனவே தனக்கெனத் தனிப் பெயரை ஏற்படுத்தியவர் இவானா. ட்ரம்ப்பை மணமுடிப்பதற்கு முன்னரே ட்ரம்ப்பின் வர்த்தக சாம்ராஜ்ஜியத்தின் பல்வேறு பொறுப்புகளையும் சுமந்தவர் இவானா.

டொனால்ட் ட்ரம்ப் – இவானா இருவரும் 1977ஆம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்தனர். 1990ஆம் ஆண்டு பரஸ்பர ஒப்புதலின் பேரில் இருவரும் விவாகரத்துச் செய்துகொண்டனர். ட்ரம்ப்பின் நான்காவது மகளான டிஃபானி, ட்ரம்ப்பின் இரண்டாவது மனைவியான மார்லா மேப்பிள்ஸுக்குப் பிறந்தவர். கடைக்குட்டியான பாரோன், ட்ரம்ப்பின் தற்போதைய மனைவியான மெலனியாவுக்குப் பிறந்தவர்.

ட்ரம்ப் தனது சுயசரிதையான ‘ட்ரம்ப்: தி ஆர்ட் ஒஃப் த டீல்’ என்ற புத்தகத்தில் இவானா பற்றிக் குறிப்பிடுகையில், சிறந்த முகாமையாளர் என்றும் போட்டிபோடும் குணம் நிறைந்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளார