பெரு நாட்டில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் குறைந்தது இதுவரை 72 பேர் பலியாகியுள்ளனர் உள்ளனர் என தெரியவந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
800க்கும் மேலான நகரங்களில் அவசரக் கால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது தலைநகர் லிமாவில் திங்கட்கிழமையிலிருந்து குடிநீர் கிடைக்கவில்லை.கடலின் வெப்பநிலை அதிகரிப்பதால், நீராவியாதல் அதிகரித்து கனமழையை பொழியச் செய்யும் நிகழ்வாக கருதப்படும் எல் நினோ என்னும் பாதிப்பால், பெரு மற்றும் பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள நாடுகள் இந்த ஆண்டின் கோடைக் காலத்தில் நிலையற்ற வானிலையை சந்தித்து வருகின்றன