ranilநாட்டுக்கு எதிரான ஜெனிவா யோசனை குறித்த விசாரணைகளுக்கு எந்தவொரு மேலைத்தேய தரப்பினரும் தேவையில்லை என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வீரகெடிய பகுதியில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

மேலும், மனித உரிமைகள் ஆணையாளரின் சில கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியது எனவும் சில கருத்துக்களில் உடன்பாடு இல்லை எனவும், பிரதமர் இதன்போது மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.