Dayan_Jayatillekaநாட்டில் ஆயுத குழுவை தோற்கடித்து ஜனநாயகத்தை நிலைநிறுத்திக் கொடுத்த பின்னர் சர்வதேச அல்லது தேசிய நீதிபதிகளை உள்ளடக்கிய நீதிமன்றங்களை அமைத்து இராணுவத்தை தண்டிக்க முயற்சிப்பது தார்மீக தன்மைக்கு முரணானது. உள்நாட்டு போர்களை வெற்றிகொண்ட நாடுகள் எல்லாம் விசேட நீதிமன்றத்தை நிராகரித்து வரும் நிலையில் நாமாக கழுத்தை நீட்டுகின்றோம் என கலாநிதி தயான் ஜெயதிகல தெரிவித்தார்.

சர்வதேச பிரேரணையை நிராகரிக்கும் இறுதி தருணத்திலும் அரசாங்கம் உறுதியான தீர்மானம் ஒன்றை எடுக்கவில்லை என்பது தெளிவாக தெரிவிகின்றது எனவும் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பிலான பிரேரணையை இலங்கை கையாளும் விதம் சாதகமானதா என சிவில் அமைப்புகளுடனான சந்திப்பு ஒன்றில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.