Header image alt text

20170320_122739வீதியிலும் ஒருநாள் செயற்திட்டத்தின் கீழ் பா.உ எஸ்.வியாழேந்திரன்(அமல்) அவர்கள் வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட புதுமண்டபத்தடி கிராம சேவகர் பிரிவில் உள்ள எண்ணம்பாலப்பூவல் கிராம மக்களை நேற்று (20.03.2017) நேரில் சென்று சந்தித்துள்ளார்.

எண்ணம்பாலப்பூவல் இளைஞர்களின் வேண்டுகோளிற்கமைய எண்ணம்பாலப்பூவல் கிராமத்திற்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் வீடு வீடாகச் சென்று மக்களது நிறைகுறைகளை கேட்டறிந்ததோடு, கிராமத்தில் உள்ள குளங்கள், பாதிப்படைந்து காணப்படும் வீதிகள், யுத்ததினால் பாதிப்படைந்த நிலையில் உள்ள கட்டிடங்கள், புனரமைக்கப்படாது காணப்படும் விளையாட்டு மைதானம் போன்றவற்றை பார்வையிட்டதுடன் கிராமத்தின் விவசாய அமைப்பு, விளையாட்டுக்கழகம், ஆலய நிருவாகத்தினர், இளைஞர் அமைப்புக்கள், கிராம அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், கிராம மக்கள் ஆகியோருடன் கிராம அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.
Read more

arrest (9)அண்மைக் காலங்களில் வாள் போன்ற கூரிய ஆயுதங்களைப் பயன்படுத்தி, யாழ்ப்பாணத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் குழுவொன்றின் பிரதான உறுப்பினர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் வசமிருந்து கைக்குண்டு ஒன்று, கத்திய உள்ளிட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

vajira abeywardenaகிராம சேவகர் வெற்றிடங்களுக்குப் புதியவர்கள் நியமிக்கப்படும் வரை, ஓய்வுபெற்ற கிராம சேவகர்கள் 2,000 பேரை சேவையில் மீள இணைத்துக் கொள்ளவுள்ளதாக, உள்விவகார அமைச்சர் வஜிர அபேவர்த்தன வவுனியாவில் தெரிவித்துள்ளார்.

கிராம சேவகர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தற்போதுள்ள வெற்றிடங்கள் நிரப்பப்படும் வரையே, ஓய்வுபெற்றவர்கள் மீள கடமைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார

graduade28 நாட்களாக தமக்கான வேலைவாய்ப்பினை வழங்கக் கோரி மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சத்தியாக்கிரகப் போராட்த்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

உரிய பதில் கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என 22 நாட்களாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக 22ஆவது நாளாகவும் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

raviபிரித்தானிய த பேங்கர் சஞ்சிகையின் தரவரிசையின் படி நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆசிய பசுபிக் வளையத்தின் சிறந்த நிதி அமைச்சர் விருதினை பெற்றுக்கொள்ள பிரித்தானியா செல்லவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுபற்றி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், பிரித்தானியாவின் த பேங்கர் சஞ்சிகையில் ஆசிய பசுபிக் வளையத்தின் 2017ஆம் ஆண்டிற்கான சிறந்த நிதி அமைச்சராக பெயரிடப்பட்டுள்ள அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கான விருது வருகின்ற 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிரித்தானியாவில் வைத்து அவருக்கு வழங்கப்படவுள்ளது. Read more

susmaடெல்லி சென்றிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் இந்திய மத்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். கடந்த மார்ச் 6ம் திகதி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரத்தை சேர்ந்த பிரிட்ஜோ என்ற மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றொரு மீனவர் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவத்தை கண்டித்து மீனவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, இந்திய மத்திய அமைச்சர்களான நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மீனவர்களுக்கு மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மாவை சந்தித்து பேச ஏற்பாடு செய்வதாக அமைச்சர்கள் உறுதிமொழி அளித்தனர். Read more

geeth noyarஊடகவியலாளர் கீத் நொயார் தாக்கப்பட்டமை தொடர்பில் மற்றுமொரு இராணுவ புலனாய்வு உறுப்பினர் கைது ஊடகவியலாளர் கீத் நொயாரைத் தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் மற்றுமொரு இராணுவ புலனாய்வு உறுப்பினர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான இராணுவ புலனாய்வு உறுப்பினரை நேற்றிரவு 9.30 அளவில் கைது செய்ததாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. 34 வயதான இராணுவ புலனாய்வு உறுப்பினர், மினுவாங்கொட பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது. 2008 ஆம் ஆண்டின் மே மாதம் 22 ஆம் திகதி, கீத் நொயார் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. Read more

Srilankan-Airlines-626x380இலங்கையின் தேசிய விமான சேவையான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், பங்களாதேஷ் தலைநகர் டாக்காவுக்கான அதனது கோடைப் பருவகால சேவைகளை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. A320/321 வகை விமானங்களுக்குப் பதிலாக, A330 விமானத்தைப் பயன்படுத்தியே, இந்த அதிகரிப்பு இடம்பெறள்ளது.

தினசரி ஒரு தடவை இடம்பெறவுள்ள இந்தச் சேவை, ஏப்ரல் 7ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளது. அதேவேளை, மாலைதீவுகளின் கான் தீவுகளுக்கு, கொழும்பிலிருந்து நடத்தப்படும் சேவையின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், ஸ்ரீலங்கன் விமான சேவை திட்டமிட்டுள்ளது. Read more