28 நாட்களாக தமக்கான வேலைவாய்ப்பினை வழங்கக் கோரி மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சத்தியாக்கிரகப் போராட்த்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
உரிய பதில் கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என 22 நாட்களாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.
யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக 22ஆவது நாளாகவும் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.