Srilankan-Airlines-626x380இலங்கையின் தேசிய விமான சேவையான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், பங்களாதேஷ் தலைநகர் டாக்காவுக்கான அதனது கோடைப் பருவகால சேவைகளை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. A320/321 வகை விமானங்களுக்குப் பதிலாக, A330 விமானத்தைப் பயன்படுத்தியே, இந்த அதிகரிப்பு இடம்பெறள்ளது.

தினசரி ஒரு தடவை இடம்பெறவுள்ள இந்தச் சேவை, ஏப்ரல் 7ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளது. அதேவேளை, மாலைதீவுகளின் கான் தீவுகளுக்கு, கொழும்பிலிருந்து நடத்தப்படும் சேவையின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், ஸ்ரீலங்கன் விமான சேவை திட்டமிட்டுள்ளது. தற்போது, வாரத்துக்கு 4 தடவைகள் இடம்பெறும் இச்சேவை, செப்டெம்பர் 17ஆம் திகதியிலிருந்து, வாராந்தம் 6 சேவைகளாக அதிகரிக்கப்படவுள்ளது. ஒக்டோபர் 29ஆம் திகதியிலிருந்து, குளிர்காலத்தில், வாரத்துக்கு 5 தடவைகள், இப் பாதையில், சேவையில் ஈடுபடவுள்ளது.