20170320_122739வீதியிலும் ஒருநாள் செயற்திட்டத்தின் கீழ் பா.உ எஸ்.வியாழேந்திரன்(அமல்) அவர்கள் வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட புதுமண்டபத்தடி கிராம சேவகர் பிரிவில் உள்ள எண்ணம்பாலப்பூவல் கிராம மக்களை நேற்று (20.03.2017) நேரில் சென்று சந்தித்துள்ளார்.

எண்ணம்பாலப்பூவல் இளைஞர்களின் வேண்டுகோளிற்கமைய எண்ணம்பாலப்பூவல் கிராமத்திற்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் வீடு வீடாகச் சென்று மக்களது நிறைகுறைகளை கேட்டறிந்ததோடு, கிராமத்தில் உள்ள குளங்கள், பாதிப்படைந்து காணப்படும் வீதிகள், யுத்ததினால் பாதிப்படைந்த நிலையில் உள்ள கட்டிடங்கள், புனரமைக்கப்படாது காணப்படும் விளையாட்டு மைதானம் போன்றவற்றை பார்வையிட்டதுடன் கிராமத்தின் விவசாய அமைப்பு, விளையாட்டுக்கழகம், ஆலய நிருவாகத்தினர், இளைஞர் அமைப்புக்கள், கிராம அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், கிராம மக்கள் ஆகியோருடன் கிராம அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.
இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் அவர்கள், கிராமத்தில் ஒருநாள் செயற்திட்டத்தின் மூலம் பல கிராமங்களுக்கு நான் நேரடியாகச் சென்று அக்கிராமங்களில் உள்ள மக்களுடன் கலந்துரையாடி என்னால் முடிந்தளவிற்கு அக்கிராமங்களின் அபிவிருத்திப் பணிகளை முன்னேடுத்துச் செல்கின்றேன். கிராமத்தில் ஒருநாள் என்ற செயற்திட்டத்தின் ஊடாக உங்களது கிராமத்திற்கு நேரடியாக விஜயம் செய்து உங்களுடன் கலந்துரையாடி இக்கிராமத்தில் அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு என்னால் இயலுமான முயற்சிகளை எடுப்பேன்.

இக் கிராமத்தின் தேவைப்பாடுகளை அரசாங்கத்தின் மூலமாகவோ, எனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் ஊடாகவோ பூர்த்தி செய்து தருவேன். கடந்த கால யுத்தத்தினால் தங்களுடைய வாழ்விடங்களை இழந்து களிமண் வீட்டில் வாழ்ந்துவரும் குடும்பங்களுக்கு உரிய அதிகாரிகளுடன் பேசி விரைவில் நிரந்தர வீடுகளை பெற்றுகட கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்று கூறினார்.

மேலும், தொழில்வாய்ப்பின்றி வாழும் இளைஞர், யுவதிகளுக்கும், பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கும் சுயதொழில் வாய்ப்பினை எற்படுத்திக் கொள்ள வட்டியில்லா, குறைந்த வட்டியிலான கடன் வசதிகளை பெற்றுக்கொள்வதற்குரிய நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார்.

அத்துடன் கடந்த கால யுத்தத்தினால் காணாமல் ஆக்கப்பட்டோரின் ஆறு குடும்பங்கள் இக் கிராமத்தில் வாழ்கின்றனர். இவர்களுக்கான எந்த விதமான நட்டஈடுகளும் இதுவரையில் வழங்கப்படவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் அவர்களால் இவர்களுக்கான நட்டஈடுகள் வழங்குவதற்கு ஆவன செய்யப்பட்டுள்ளது.

20170320_093643 20170320_094137