w1வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக கனடா நாட்டைச் சேர்ந்த வைத்தியர் தனயசிங்கம் பரமனாதன் அவர்களால் தனது பிறந்தநாளை முன்னிட்டு முல்லைத்தீவு முள்ளியவளை 4ம் வட்டாரத்தை சேர்ந்த கடந்த யுத்ததத்தின் போது தனது கைகள் இரண்டையும் கண் ஒன்றையும் இழந்த நிலோசன் றசிதா என்பவருக்கு வாழ்வாதார உதவியாக 40,000 ரூபா வழங்கபட்டுள்ளது.

மேற்படி பயனாளி வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய இப் பயனாளிக்கு தனது பிறந்தநாளை முன்னிட்டு இவ் கைங்கரியத்தை ஆற்றியுள்ள தனயசிங்கம் பரமநாதன் ஜயாவுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினராலும் பயனாளி சார்பாகவும் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறிக்கொள்ளும் தருணம் இவரின் பணி தொடர இறைவனை பிராத்திக்கின்றோம். (வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம்).