களுத்துறையில் சிறைச்சாலை பஸ்ஸின்மீது, தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்தையடுத்து, சிறைச்சாலைகள மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம். சுவாமிநாதனின் பரிந்துரையின் பேரில், கேகாலை சிறைச்சாலையிலுள்ள அதிகாரிகள், 0.7 மில்லியன் ரூபாய் செலவில், சிறைச்சாலை பஸ்ஸ_க்கு மாற்றீடாக, குண்டு துளைக்காத பஸ்ஸொன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் மற்றும் கைதிகள் ஐந்து பேர் என்று கொல்லப்பட்ட நிலையில், கைதிகளை பாதுகாப்பான முறையில் கொண்டு செல்வதற்கு, அமைச்சரால் நிதியொதுக்கீடு செய்யப்பட்டதையடுத்தே, இந்த பஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சிறைச்சாலை பஸ், இராணுவ பொறியியலாளர்களால் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த பஸ்ஸின் தரம் சோதனை செய்யப்பட்டுள்ளது என்றும், கேகாலை சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எந்தவொரு ஆயுதத்தாலும் சேதப்படுத்தப்பட முடியாத இந்த பஸ், தற்போது, சிறைச்சாலைகளில் செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்படுகின்றது என்று அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.