bவிடுதலைப் போராட்டம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் மன்னார் மாவட்டத்தின் தோமாஸ் புரி, வங்காலையைச் சேர்ந்த திருமதி அன்னம்மா ஜோன் குலாஸ் அவர்களுக்கு 25,000/- ரூபா நிதியொதுக்கீட்டில் அரவை இயந்திரம் (கிறைண்டர்) ஒன்றையும், மருந்துப் பொருட்களையும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இன் ஜேர்மன் கிளையினர் வாழ்வாதார உதவியாக வழங்கியுள்ளனர்.

மறைந்த கழகத் தோழர் ரமேஸ் (ஜோசெப் பேடினன்ட்) அவர்களின் தாயாரான அன்னம்மா, ஆயர்வேத வைத்தியம் செய்து வருபவர். இருதய நோயாளியான அவரது கணவர் ஜோன் குலாஸ் ஆயர்வேத மருந்து தயாரிப்பதில் இவருக்கு உதவியாக இருந்து வருகின்றார். முதலீடு இன்மையால் சிறிதளவில் வைத்தியம் செய்துவந்த இவர்கள் தமது வாழ்க்கையைக் கொண்டு செல்வதற்கு மிகுந்த சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் இவர்களின் வாழ்வாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில் மருந்துகளை அரைப்பதற்காக அரவை இயந்திரம் ஒன்றும், மருந்துப் பொருட்களும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இன் ஜேர்மன் கிளையினரால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. மேற்படி உதவி வழங்கும் நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயற்குழு உறுப்பினர் (மன்னார்) திரு. இரா.அந்தோனிப்பிள்ளை (கொன்சால்) பங்குகொண்டிருந்தார்.d e f gc a b