தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலக அமைச்சினால் முன்னேடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழ் நேற்று யாழ். தெல்லிப்பளை வீமன்காமம் தெற்கு பகுதி மக்களின் நலனுக்கான சுகாதார நிலைய மேம்பாட்டுத் திட்டத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலக அமைச்சின் தலைவியும், முன்னாள் ஐனாதிபதியும் ஆகிய சந்திரிக்கா பண்டாரநாயக்க கலந்துகொண்டு இந்த செயற்றிட்டத்தினை ஆரம்பித்து வைத்தார். இதில் வடமாகாண ஆளுநர் ரெஐpனோல்ட குரே, மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், தெல்லிப்பளை பிரதேச செயலாளர் ஸ்ரீமோகன், மற்றும் துறைசாந்த அதிகாரிகள்,பொது மக்கள் கலந்துகொண்டிருந்தனர். 06 மில்லியன் ரூபா செலவில் இவ் அபிவிருத்திகள் முன்னேடுக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதி மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க மக்கள் சுகாதார சேவைகளுக்காக இந்த செயற்றிட்டம் முன்னேடுக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.