accident (3)மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை பிரதான வீதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெல்லாவெளி பகுதியிலிருந்து வேகமாக சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல், வழியில் சென்று கொண்டிருந்த எருமைமாடு ஒன்றுடனும். பின்னர் பனைமரம் ஒன்றுடனும் மோதுண்டுள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதேவேளை சிகிச்சைப்பெற்று வந்த பாலையடி வட்டையைச் சேர்ந்த சபாரெத்தினம் பிரபு (வயது 30) என்பவரே சிசிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். காயமடைந்த மற்றைய நபர் சிசிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவத்தில் 4 வயதான எருமைமாடும் உயிரிழந்துள்ளதுடன். இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.