sயாழ் இந்துக் கல்லூரி மாணவன் ஏ.அபிநந்தன் க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் ஐந்தாம் இடத்தையும் தமிழ் மொழி மூலத்தில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

2016ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று அதிகாலை இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதன்போது 2016ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் விபரம் வெளியாகியுள்ளன. இதனடிப்படையில் அகில இலங்கை ரீதியில் ஐந்தாம் இடத்தையும் தமிழ் மொழி மூலம் முதலாம் இடத்தையும் யாழ் இந்துக் கல்லூரி மாணவன் பெற்றுள்ளார். இது தொடர்பாக யாழ் இந்துக்கல்லூரியின் பிரதி அதிபர் சதாசிவம் நிமல் கருத்து தெரிவிக்கையில், 262 மாணவர்கள் இந்த பரீட்சைக்கு தோற்றியுள்ளனர். இதில் நூறுவீத சித்தி கிடைத்துள்ளது என்று அவர் தெரிவித்தார். இது குறித்து அ.அபிநந்தன் கருத்து தெரிவிக்கையில்,

எனது தாய் – ஆசிரியர், தந்தை – மருந்தாளர், எனது பெற்றோர் மற்றும் சித்தியின் ஊக்கமளிப்பினால் நான் சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளேன். இந்நிலையில் உயிரியல் விஞ்ஞான துறையில் தொடர்ந்து கல்வி கற்பதற்கு விரும்புகிறேன். அது தவறினால் நோய்கள் பற்றிய ஆய்வுத்துறையில் கல்வியை கற்க விரும்புகிறேன். அதேபோல் எனது வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றிகள் என்று தெரிவித்துள்ளார்.