white vanஊடகவியலாளர் கீத் நொயரை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வேன் பிலியந்தலை பிரதேசத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள இராணுவ மேஜர் புலவத்தகேவுக்கு நெருக்கமான பெண் ஒருவரின் வீட்டில் இருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று குறித்த வேன் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. ஊடகவியலாளர் கீத் நொயரை கடத்துவதற்கு மற்றும் லசந்த விக்ரமசிங்கவின் படுகொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுக்கு இந்த வேன் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

ஊடகவியலாளர் கீத் நொயர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை இராணுவப் படையின் புலனாய்வுப் பிரிவு உறுப்பினரான மேஜர் ஒருவர் உட்பட 05பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.