அரசாங்க ஊழியர்களுக்காக 300 புதிய வீடுகளை நிர்மாணிக்க அரச நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது. கொழும்பு, மொனராகலை, கம்பஹா மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் புதிய வீடுகளை நிர்மாணிக்கத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நிர்மாணிக்கப்படும் வீடுகளை முன்னுரிமையின் அடிப்படையில் பகிர்ந்தளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் மாத்திரம் 450 அரச ஊழியர்கள் உத்தியோகப்பூர்வ இல்லத்தைப் பெற்றுக்கொள்வதற்கான காத்திருப்புப் பட்டியில் உள்ளதாக அவர் கூறியுள்ளார். எனினும், 140 அரச சேவையாளர்களுக்கு மாத்திரமே உத்தியோகப்பூர்வ இல்லங்கள் வழங்கப்படுவதாகவும் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி மேலும் குறிப்பிட்டுள்ளார்.