sயாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர்களால் நேற்று முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற உண்ணாவிரத போராட்டத்தில், இரண்டு மாணவர்கள் மயக்கமடைந்த நிலையில் இன்று யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நான்காம், மூன்றாம் வருடங்களைச் சேர்ந்த மாணவர்களே இவ்வாறு மயக்கமடைந்துள்ளனர். முதலாம் வருட மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வின்போது நிகழ்ந்த அசம்பாவிதங்களுக்குப் பொறுப்பானவர்கள் எனத் தெரிவித்து கலைப்பீடம் கலைக்கப்பட்டதுடன், கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர்கள் உள்ளிட்ட 13 பேருக்கு காலவரையற்ற வகுப்புத் தடை விதிக்கப்பட்டு விசாரணை இடம்பெற்றுவரும் நிலையிலேயே, இந்த உண்ணாவிரத போராட்டம் மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்தில், இராமநாதன் நுண்கலைப்பீட மாணவர்களும் கலந்து கொண்டுள்ளனர். தமது கோரிக்கைகளை நிர்வாகம் நிறைவேற்றும் வரை, குறித்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.