Header image alt text

sports (5)வட மாகாண ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சைக்கிள் ஒட்டப்போட்டி நிகழ்வு இன்றுமுற்பகல் 11மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டு நடைபெற்றது.

இந்நிகழ்வில் விருந்தினர்களாக வட மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன், பிரதம மாவட்ட கணக்காளர் ஜெசு ரேஜிநோல்ட், சிரேஸ்ட விளையாட்டு அதிகாரி சதானந்தம் மற்றும் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்ததுடன் இந்நிகழ்வில் ஏனைய விளையாட்டு அலுவலகர்களும் கலந்துகொண்டிருந்தார்கள். Read more

burn house (1)முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் அமைந்துள்ள வித்தியபுரம் பகுதியில் தீயினால் தமது வீட்டினையும், நுண்கடன் நிதிப்பணமாக பெற்று வைத்திருந்த 60,000 ரூபாவினையும், தமது உடமைகளையும் இழந்து நிர்க்கதியான காளிதாஸ் சரஸ்வதி குடும்பத்தினரை

வட மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன் அவர்கள் இன்றையதினம் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இவர்களுக்கு மாவட்ட செயலகம் ஊடாக தற்காலிக தரப்பாள் மற்றும் சில சமையல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. Read more

ssddகிளிநொச்சி, இரணைமடு பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்து மரங்களை வெட்டிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் கிளிநொச்சி முகாம் அதிகாரிகள் குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்களிடம் இருந்த ட்ரெக்டர் மற்றும் மரம் வெட்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட மேலும் சில உபகரணங்களும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைக்காக ஒலுமடு வனக் காரியாலயத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

iniya vaalvuஎமது புலம்பெயர் உறவான லண்டன் நாட்டை சேர்ந்த செல்வன் அகிலியன் மோகன் அவர்கள் தனது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று முல்லைத்தீவு மாவட்த்தை சேர்ந்த விழிப்புலன் செவிப்புலனற்ற 54 மாணவர்கள் தங்கி கல்வி கற்றுவரும் இனிய வாழ்வு இல்லத்திற்கு

சிறார்களின் உணவு தேவையை கருத்தில் கொண்டு பருப்பு 20கிலோ சீனி 50கிலோ அரிசி 115கிலோ என்பவற்றை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். தனது பிறந்ததினத்தை முன்னிட்டு பிள்ளைகளின் உணவு பொருட்களின் தேவையை கருத்தில் கொண்டு உணவு இருப்பை உறுதிசெய்துள்ள செல்வன் அகிலியன் அவர்களுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் சார்பாகவும் இல்ல சிறார்களின் சார்பாகவும் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறிக்கொள்கின்றோம். (வட்டு இந்து வாலிபர் சங்கம்)

aயாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் முன்னெடுத்த உணவு தவிர்ப்பு போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த மாணவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகம் இன்று அறிவித்ததையடுத்து, இந்த உணவு தவிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்புக்கமைய, அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வகுப்புத் தடை ரத்து செய்யப்பட்டுள்ளது. Read more

Q6வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் முல்லைத்தீவு மாவட்த்தைச் சேர்ந்த புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட 100 பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு புத்தகப்பைகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

இன்று எமது புலம்பெயர் உறவான லண்டன் நாட்டைச் சேர்ந்த சிவதீபன் நந்தினி தம்பதிகளின் திருமண ஆண்டை முன்னிட்டு கடந்த யுத்தத்தின்போது தமது கணவனை இழந்து தங்களின் பிள்ளைகளை கல்வி கற்பிப்பதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ள புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட அமரா பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் 100 பிள்ளைகளக்கு புத்தகபைகள் அன்பளிப்பாக வழங்கபட்டுள்ளன. Read more

ssசட்ட மா அதிபர் திணைக்களத்தின் பணிப்பிற்கு அமைய, யாழ்ப்பாண சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் 30 பேர் நேற்று இரவு யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை விரைவில் தாயகம் திருப்பியனுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஊர்க்காவற்துறை பதில் நீதவான் சபேசன் முன்னிலையில் மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர். Read more

23.03 (4)வவுனியா செட்டிகுளம், கப்பாச்சி நாமகள் பாடசாலையின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு நிகழ்வு கடந்த 23.03.2017 அன்று பாடசாலை மைதானத்தில் பாடசாலையின் முதல்வர் திரு. செ.புஸ்பநாதன் அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வின் விருந்தினர்களாக புளொட் அமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதன், FEED அமைப்பின் செயலாளர் ஐ.யசோதரன், கோட்டக்கல்வி அதிகாரி எஸ்.ஜேசுதாசன், கிராம அலுவலர் பா.பாலகிரிதரன், உலக உணவுத் திட்ட அதிகாரி எஸ்.கிரிதரன், புளொட் அமைப்பின் மத்தியகுழு உறுப்பினர் வே.குகதாசன் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர். இந்நிகழ்வில் மாணவச் சிறார்களுக்கு வழங்கப்பட்ட ரூபா 4000/- பெறுமதியான அனைத்து பரிசுப் பொருட்களையும் புளொட் அமைப்பின் ஜேர்மன் கிளையினர் வழங்கியிருந்தனர். Read more

vavuniya new bus standபெரும் நிதிச் செல­வில் வவு­னி­யா­வில் அமைக்­கப்­பட்ட பேருந்து நிலை­யம் பாழடையுமுன் மாற்று ஏற்­பா­டு­களை மேற்­கொண்டு அதை மக்­கள் பயன்­பாட்­டுக்கு விட வேண்­டும் என்று மாவட்ட மக்­கள் கோரிக்கை விடுத்­துள்ள­னர்.

திட்­ட­மி­ட­லின்மை கார­ண­மா­க­வும், ஒத்­து­ழைப்பு இன்­மை­யா­லும் 195 மில்­லி­யன் நிதிச் செல­வில் அமைக்­கப்­பட்ட பேருந்து நிலை­யம் கால்­ந­டை­க­ளி­ன­தும் நாய்­க­ளி­ன­தும் கூடா­ர­மா­க­வும் விளங்­கு­கின்­றது. மாவட்­டத்­தின் அபி­வி­ருத்­திக்கு உகந்த வகை­யில் பயன்­ப­டுத்த உரிய திட்­ட­மி­டலை மேற்­கொண்டு ஆவன செய்ய வேண்­டும். Read more

Geneva UNஇலங்­கை­யில் மைத்­திரி-– ரணில் ஆட்­சி­யி­லும் தொடர்ச்­சி­யாக இடம்­பெற்று வரும் கடத்­தல் மற்­றும் சித்­தி­ர­வ­தை­கள் தொடர்­பில் சாட்­சி­யங்­க­ளு­டன் கூடிய ஆவ­ண­மொன்று ஐ.நா மனித உரிமைகள் சபை­யின் மீளாய்­வுக்கு பன்­னாட்டு மனித உரி­மை­கள் அமைப்­பால் முன்­வைக்­கப்­பட்டுள்­ளதாக தெரியவருகின்றது.

தென்­னா­பி­ரிக்கா ஜொஹா­ன்ஸ்­பேர்க்­கைத் தள­மா­கக் கொண்­டி­யங்­கும் இலங்­கை­யின் உண்­மைக்­கும் நீதிக்­கு­மான திட்­டம் (ஐ.ரி.ஜே.பி) என்ற அமைப்பே 2015ஆம் ஆண்டு தொடக்­கம் 2017ஆம் ஆண்டு வரை மைத்­திரி ரணில் ஆட்­சிக்­கா­லத்­தில் இடம்­பெற்ற 48 கடத்­தல் மற்­றும் சித்­தி­ர­வதைச் சம்­ப­வங்­களை உள்­ள­டக்­கிய இந்த ஆவ­ணத்தை ஐ.நா மனித உரி­மை­கள் சபை­யின் மீள்­பார் வைக்கு முன்­வைத்­துள்­ளது. Read more