யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் முன்னெடுத்த உணவு தவிர்ப்பு போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த மாணவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகம் இன்று அறிவித்ததையடுத்து, இந்த உணவு தவிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்புக்கமைய, அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வகுப்புத் தடை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் திங்கட்கிழமை வழமைபோல் விரிவுரைகள் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தில் கடந்த மார்ச் மாதம் 10ஆம், 11ஆம் திகதிகளில் இடம்பெற்ற அசாதாரண நிலையுடன் தொடர்புடையதாக அறிவிக்கப்பட்ட மாணவர்களுக்கே இந்த வகுதிப்புத்தடை விதிக்கப்பட்டிருந்தது.