பெரும் நிதிச் செலவில் வவுனியாவில் அமைக்கப்பட்ட பேருந்து நிலையம் பாழடையுமுன் மாற்று ஏற்பாடுகளை மேற்கொண்டு அதை மக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என்று மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திட்டமிடலின்மை காரணமாகவும், ஒத்துழைப்பு இன்மையாலும் 195 மில்லியன் நிதிச் செலவில் அமைக்கப்பட்ட பேருந்து நிலையம் கால்நடைகளினதும் நாய்களினதும் கூடாரமாகவும் விளங்குகின்றது. மாவட்டத்தின் அபிவிருத்திக்கு உகந்த வகையில் பயன்படுத்த உரிய திட்டமிடலை மேற்கொண்டு ஆவன செய்ய வேண்டும். மக்களின் வரிப் பணத்தில் அமைக்கப்பட்ட இந்தத் திட்டம் வீணாகாத வகையில் பொருத்தமான முடிவை மேற்கொள்ள வேண்டும். பேருந்து நிலையமாகவோ அல்லது பொருத்தமான செயல்பாட்டையோ மேற்கொண்டு கட்டடம் பாதிப்படையாதவாறு பாதுகாக்க முன்வர வேண்டும்.”- என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.