sports (5)வட மாகாண ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சைக்கிள் ஒட்டப்போட்டி நிகழ்வு இன்றுமுற்பகல் 11மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டு நடைபெற்றது.

இந்நிகழ்வில் விருந்தினர்களாக வட மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன், பிரதம மாவட்ட கணக்காளர் ஜெசு ரேஜிநோல்ட், சிரேஸ்ட விளையாட்டு அதிகாரி சதானந்தம் மற்றும் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்ததுடன் இந்நிகழ்வில் ஏனைய விளையாட்டு அலுவலகர்களும் கலந்துகொண்டிருந்தார்கள். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் போட்டி நிறைவுபெற்றபோது அதில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களும் மற்றும் பணப்பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. ஆண்களுக்கான 100 கிலோமீற்றர் மற்றும் பெண்களுக்கான 40கிலோமீற்றர் தூர சைக்கிள் ஓட்டப் போட்டி இன்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

sports (1) sports (2) sports (3) sports (4) sports (5) sports (6)