கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்கள் தமது சொந்த கிராமத்தையும் வீடுவாசல்களையும் கையகப்படுத்தி நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அதனை விடுவிக்கவேண்டும் எனக்கோரி முன்னெடுத்துள்ள தொடர் போராட்டம் இன்று 33வது நாளாக தொடர்கின்றது.
கடந்த முதலாம் திகதி முதல் கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு இராணுவத்தலைமையக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக கூடாரம் அமைத்து இவர்களின் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எங்களது காணிக்குள் நாங்கள் அடியெடுத்து வைக்கும் வரை எமது போராட்டம் தொடர்ந்து நடைபெறுமென கேப்பாப்புலவில் 33வது நாளாக போராட்டம் நடத்தி வரும் மக்கள் தெரிவித்துள்ளனர். Read more