ஜப்பானின் தன்னியக்க பாதுகாப்பு கடற்பாதுகாப்பு படையணிக்கு சொந்தமாக “டெரசுக்கி” கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
தொழில்ரீதியான அனுபவங்களை பறிமாற்றிக் கொள்ளல் மற்றும் இருநாட்டு நற்புறவை வலுப்படுத்தும் நோக்கில் கடற்படை பயிற்சிகள் சிலவற்றில் ஈடுவதன் பொருட்டு குறித்த கப்பல் இலங்கை வந்துள்ளது. இதனையொட்டி, ஆறாவது பாதுகாப்பு பிரிவின் கட்டளைத் தளபதி, டெரசுகி கப்பலின் கட்டளைத் தளபதி மற்றும் ரியர் அட்மிரல் நிராஜ் ஆட்டிகல ஆகியோருக்கு இடையில் இருதரப்பின் முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
ஜப்பானின் தன்னியக்க பாதுகாப்பு படைப்பிரிவிற்கு சொந்தமான 6 கப்பல்கள் கடந்த வருடம் இலங்கைக்கு வந்துள்ள நிலையில் நேற்று இலங்கை வந்த “டெரசுக்கி” கப்பல் இரண்டு நாட்கள் இங்கு தங்கியிருந்து பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளது.