Posted by plotenewseditor on 3 April 2017
Posted in செய்திகள்
2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது, போலி ஆவணங்களைத் தயாரித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, வெளிநாடு செல்வதற்காக நீதிமன்றத்தின் அனுமதியைக் கோரியிருந்த நிலையில், கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இன்றையதினம் அவருக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விகும் களுஆராச்சியினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவிலுள்ள தனது மகளைப் பார்ப்பதற்குச் செல்வதற்கே, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, வெளிநாடு செல்லும் கோரிக்கையை முன்வைத்திருந்தார். Read more