கடந்த ஆட்சிக் காலத்தில் பல்வேறு தரப்பினர்களால் கொழும்பு புறக்கோட்டை வர்த்தகர்களிடம் இருந்து கப்பம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புறக்கோட்டை வர்த்தக சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட உள்ளுராட்சிமன்ற அமைச்சர் பைசர் முஸ்தப்பா இதனை தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இந்நிலைமை மாற்றப்பட்டு, வர்த்தகர்கள் சுதந்திரமாக செயற்படுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.