thissa-athanaike2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது, போலி ஆவணங்களைத் தயாரித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, வெளிநாடு செல்வதற்காக நீதிமன்றத்தின் அனுமதியைக் கோரியிருந்த நிலையில், கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இன்றையதினம் அவருக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விகும் களுஆராச்சியினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவிலுள்ள தனது மகளைப் பார்ப்பதற்குச் செல்வதற்கே, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, வெளிநாடு செல்லும் கோரிக்கையை முன்வைத்திருந்தார். இதற்கமைய, எதிர்வரும் 10ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரையான காலப்பகுதியில், அவுஸ்ரேலியாவிலுள்ள தனது மகளுடன் வசிப்பதற்கு திஸ்ஸவுக்குச் சந்தர்ப்பம் கிட்டியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.