sfd (2)காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு, இறப்புச்சான்றிதழ்கள், நட்டஈடுகளை வழங்குவதற்கு அரசாங்கம் காட்டும் அக்கறையை, காணாமல் போனவர்களை மீட்பதில் காட்டவில்லை என்று, கிளிநொச்சியில், காணாமல் ஆக்கப்;பட்ட தமது உறவுகளை மீட்டுத்தரக்கோரி, 44ஆவது நாளாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவோர் தெரிவித்துள்ளனர்.

“வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பான உரிய பதிலை, இந்த அரசாங்கம் வழங்கவேண்டும். இரகசிய முகாம்களில் தடுத்து வகைப்பட்ட தமது பிள்ளைகளை விடுவிக்க வேண்டும்’ எனக்கோரி, கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டம், இன்று 44ஆவது நாளாகவும் தொடர்ந்தது. “ஒன்றரை மாதமாகியும் இந்த அரசாங்கம், தங்களுக்கு உரிய பதில் எதனையும் வழங்கவில்;லை. இதேபோன்று ஏனைய மாவட்டங்களிலும் போராட்;டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு இரவு பகலும், எமது உறவுகளின் பதில் கிடைக்கும் என்று எதிர்பார்ப்போடு, நாங்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம்.

கடந்த 44 நாட்களும், எமக்கு ஏமாற்றமான நாட்களாகவே இருக்கின்றன. எங்களது போராட்டத்துக்கு, பல்வேறு தரப்புக்களும் ஆதரவு வழங்கி வருகின்றன’ என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். “இந்நிலையில் திங்கட்கிழமை சர்வதேச மன்னிப்பு சபையின் பிரதி பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போது, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு தொடர்பில், ஒருவித நம்பிக்கை கூட எங்களுக்கு இல்லை.

காணாமல் ஆக்கப்பட்ட எங்களது உறவுகள் தொடர்பில், அவர்களுக்கான இறப்பு சான்றிதழ்களை வழங்கவோ, அல்லது நட்டஈடுகளை வழங்கவோ, அரசாங்கம் காட்டுகின்;ற அக்கறை, காணாமல் போனவர்களை கண்டறிவதற்கு அல்லது மீட்பதற்கு காட்டவில்லை. “இவ்வாறு காணாமல் போனவர்கள் தொடர்பில், அரசாங்கம் உரிய பதிலைத்தரவிட்டால், எமது போராட்ட வடிவங்களை மாற்றி, அரசாங்கத்துக்கு நெருக்;கடிகளை கொடுக்கும் விதத்தில் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளளோம்’ என அவர்கள் தெரிவித்துள்ளனர்.