kachchatheevuஇந்திய மீனவர்களின் கோரிக்கையை இலங்கை ஏற்க மறுக்கும் பட்சத்தில், கச்சைதீவு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழக மீனவ சங்க தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் எதிர்வரும் 7ஆம் திகதி இடம்பெறவுள்ள இலங்கை மற்றும் இந்தியாவிற்கிடையிலான பேச்சுவார்த்தையில், தமிழக மீனவர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மீனவ சங்க தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்நிலையில் இன்று இடம்பெற்றுள்ள மீனவர் சங்க ஆலோசனை கூட்டத்தின் போது பேசியுள்ள மீனவசங்க தலைவர்கள், கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்கக்கோரியும், 1974 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் கச்சத்தீவில் இந்திய மீனவர்களின் வலைகளை உலரவிடுவதற்கும், மீனவர்கள் ஓய்வெடுப்பதற்கும் அனுமதி அளிக்கும்படி கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் குறித்த கோரிக்கைகளை இலங்கை அரசு ஏற்க மறுக்கும் பட்சத்தில், இராமேஸ்வரம் மற்றும் பாம்பன் பகுதியிலுள்ள மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் இணைந்து எதிர்வரும் 25 ஆம் திகதி கச்சத்தீவு முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.