Header image alt text

DSC06660முல்லைத்தீவு கருவேலன்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் அபிவிருத்திக்கு முன்னோடியானவரையும், பாடசாலையில் விசேட திறமைகளைப் பெற்றிருந்த மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (04.04.2017) செவ்வாய்க்கிழமை பாடசாலை வளாகத்தில் பாடசாலையின் அதிபர் திருமதி யோ.துரைரெத்தினம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மேற்படி நிகழ்வில் விருந்தினர்களாக வட மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன், உதவிக் கல்விப் பணிப்பாளர் சி.ஜெயபாலன், கோட்டக்கல்வி அதிகாரி க.பங்கஜசெல்வன், கிராம சேவையாளர் திருமதி நீரூஜா, அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி தீபா ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர். Read more

sddsஇலங்கைக்கு சீனாவின் உயர் மட்ட அரசியல் ஆலோசகர் யு ஷெங்ஷாங் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். சபாநாயகர் கரு ஜயசூரியவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள யு ஷெங்ஷாங் பாகிஸ்தானிற்கும் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

யு ஷெங்ஷாங் இன்று முதல் எதிர்வரும் சனிக்கிழமை வரையில் இரு நாடுகளுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், யு ஷெங்ஷாங் சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டு தேசிய குழுமத்தின் தலைவர் ஆவார்.

sdfdfஅவுஸ்திரேலியாவிற்கு புகலிடம் கோரிச் செல்லும் வடபகுதி மக்களை மனிதாபிமானத்துடன் அணுகுமாறு அவுஸ்திரேலிய நாட்டின் சர்வதேச அபிவிருத்தி மற்றும் பசுபிக் நாடுகளிற்கான அமைச்சரிடம் அனந்தி சசிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய நாட்டின் சர்வதேச அபிவிருத்தி மற்றும் பசுபிக் நாடுகளுக்கான அமைச்சர் மற்றும் அவரது குழுவினர் இன்று யாழிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். அந்த விஜயத்தின் போது, வடமாகாண முதலமைச்சர் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் உட்பட முதலமைச்சரின் செயலாளர்கள் குழுவினருடன் முதலமைச்சரின் அலுவலகத்தில் சந்திப்பு இடம்பெற்றது. Read more


er
தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் சர்வதேச நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு நெருக்குதல்களை கொடுப்பதன் மூலமே மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்க முடியுமென சர்வதேச மன்னிப்புச் சபையின் தலைவர் சலில் செட்டியிடம் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

யாழிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த சர்வதேச மன்னிப்புச் சபை பிரதிநிதிகள், வட மாகாணத்தில் கடந்த மூன்று தினங்களாக தங்கியிருந்து, காணாமல் போனவர்களின் உறவுகள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் உண்மை நிலவரங்கள் குறித்து ஆராய்ந்திருந்தனர். Read more

qatarகட்டார் நாட்டில் இருந்து எவரும் இலங்கைக்கு சுற்றுலா வர வேண்டாம் என, அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சினால், அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இலங்கையில் பரவி வரும் எச்.வன்.என்.வன் நோய்த் தொற்றே இதற்குக் காரணமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

electricity boardஇன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக, இலங்கை மின்சார சபை ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சம்பள உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்னிருத்தி அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக, அச் சங்கத்தின் பிரதம செயலாளர் ரஞ்சன் ஜெயலால் சுட்டிக்காட்டியுள்ளார்.

mahinda desapriyaஉள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான எல்லை நிர்ணயம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் மும் மொழிகளிலும் வழங்கப்பட வேண்டும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தற்போது தனக்கு சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளிலேயே குறித்த அறிக்கை கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதுஎவ்வாறு இருப்பினும், இதன் தமிழ் பிரதி இணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, அரச அச்சகத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். எனினும், அதனை அச்சிடும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

graduateமட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் மற்றும் அகில இலங்கை ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்க இணைப்பாளர் உட்பட நான்கு பேர் மீது பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு 08ஆம் மாதம் 02ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் அமைதிக்கும் சமாதானத்திற்கும் பங்கம் ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் நடைபெறலாம், அரச கரும நடவடிக்கைகளுக்கு குந்தகம் அல்லது இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ள முற்பட்டதாக தெரிவத்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கடந்த மாதம் மார்ச் 07ஆம் திகதி மட்டக்களப்பு பொலிஸாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. Read more

sவடமாகாண வேலையற்ற பட்டதாரிகள், நியாயமான சுய உரிமையான அரச நியமனங்களை கேட்டு நடத்தி வரும் போராட்டம் இன்றுடன் 38 ஆவது நாளாக இடம்பெற்றுள்ளது.

இதனை வலியுறுத்திய கவனயீர்ப்பு நடைபயணம் ஒன்று இன்றையதினம் யாழ் பல்கலைகழக முன்றலில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு யாழ் பலாலி வீதி, ஸரான்லி வீதியூடாக மத்திய பேரூந்து நிலையம் வரை சென்று அங்கு இருந்து யாழ் ஆஸ்பத்திரி வீதியுடாக யாழ் மாவட்ட செயலகத்தை சென்றடைந்தனர். Read more

swordசாவகச்சேரி அல்லாரைப் பகுதியில், வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில் இளைஞர் ஒருவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு இடம்பெற்ற இந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் 22வயது இளைஞர் ஒருவருக்கே காலில் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென காயமடைந்தவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மட்டுவில் முத்துமாரி அம்மன் கோவிலை அண்டிய பகுதி சாலையில் கதைத்துக் கொண்டிருந்த மூவர்மீது வாள்வெட்டு இடம்பெற்று இருவர் யாழ்.போதனா வைத்தியசாலையிலும் ஒருவர் சாவகச்சேரி வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.