உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான எல்லை நிர்ணயம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் மும் மொழிகளிலும் வழங்கப்பட வேண்டும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தற்போது தனக்கு சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளிலேயே குறித்த அறிக்கை கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதுஎவ்வாறு இருப்பினும், இதன் தமிழ் பிரதி இணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, அரச அச்சகத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். எனினும், அதனை அச்சிடும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.