சிரியா விமானத்தளத்தின் மீது அமெரிக்கா திடீர ஏவுகணை தாக்குதல் நடத்திய பின்னர், ரஷ;யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை வடமேற்கு சிரியாவில் டஜன் கணக்கான பொதுமக்கள் பலியாக காரணமான ரசாயன தாக்குதலை நடத்த இந்த விமானத்தளம் பயன்படுத்தப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சிரியாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிலடி ஏவுகணைத் தாக்குதல் :ஆனால், சிரியாவின் அதிபர் பஷhர் அல் அசாத்திற்கு ஆதரவு அளிக்கும் ரஷ;யா அமெரிக்காவின் இந்த தாக்குதலை கண்டித்திருப்பதோடு, சிரியாவின் மீது நடுவானில் மோதல்களை தவிர்க்க போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை இடைநிறுத்தியுள்ளது.
சிரியா அரசுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்டுள்ள முதல் ராணுவ நடவடிக்கை இதுவாகும்.
இந்த தாக்குதலில் குறைந்தது ஆறு பேர் கொல்லபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இட்லிப் மாகாணத்தில் கிளாச்சியாளர்களின் பிடியில் இருக்கும் கான் ஷேய்கயுன் நகரில் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கக்கூடிய ரசாயன தாக்குதல் என சந்தேகிக்கப்படும் தாக்குதலில் பல குழந்தைகள் உள்பட 80 பொது மக்கள் கொல்லப்பட்ட சில நாட்களுக்கு பின்னர் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
.