swedenசுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமின் மையப்பகுதியில் ஒரு கடைக்குள் பாரஊர்தியைப் புகுத்தி நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்ததாக சுவீடன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டதாகவும் 12 பேர்வரை படுகாயம் காயமடைந்திருப்பதாக சுவீடன் போலீசார் தெரிவித்தனர்.
மேலும் உயிரிழந்தவர்கள் அல்லது காமடைந்தவர்களின் எண்ணிக்கை குறித்து போலீசார் உறுதிப்படுத்தவில்லை.நகரில் பாதசாரிகள் பயன்படுத்தும் முக்கியப் பகுதியான குயின்ஸ் வீதியில், நேற்று உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு இந்தத் தாக்குதல் நடைபெற்றது.
தாக்குதலுக்கு பயன் படுத்தப்பட்ட பாரஊர்தியை தாக்குதல் நடத்தியவர் கடத்தி வந்துள்ளதாகவும்.
இது தொடர்பாக ஸ்ரொக்கொல்ம் பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளர்.

ஒரு பாரஊர்தி, டிபார்ட்மென்டல் ஸ்டோருக்குள் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு புகுந்ததாகவும், அதில் அடிபட்டு மக்கள் கிழே விழுந்து கிடந்ததைப் பார்க்க முடிந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். சம்பவத்துக்குப் பிறகு சிட்டி சென்டரை போலீசார் சுற்றி வளைத்து, அரண் அமைத்துள்ளனர்.