uma school 05வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் கட்டடத் திறப்பு விழாவும் கௌரவிப்பு நிகழ்வும் இன்று 09.04.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30மணியளவில் முன்பள்ளி மண்டபத்தில் முன்பள்ளியின் அதிபர் திருமதி மீரா குணசீலன் அவர்களது தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட் பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி லிங்கநாதன், வவுனியா நகரசபையின் முன்னாள் உப தலைவர் க.சந்திரகுலசிங்கம், கே.தர்மபாலன் (முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர், வவுனியா தெற்கு வலயம்), எஸ்.இராஜேஸ்வரன் (முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர், வவுனியா வடக்கு வலயம்), கலாநிதி தமிழ்மணி அகளங்கன் (தலைவர், கலை இலக்கிய நண்பர்கள் வட்டம்), எஸ்.அருள்வேல்நாயகி (முன்பள்ளி மாவட்ட இணைப்பாளர்), வி.யோகநாதன் (கிராம சேவையாளர்), இலங்கேஸ்வரன் (பொலிஸ் அதிகாரி), ஐ.விக்னபவானந்தன் (ஜே.பி –செயலாளர் சிவன் கோயில்)ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக க.கஜேந்திர சர்மா (ஆலய குரு வேப்பங்குளம் பிள்ளையார் கோயில்), எஸ்.ஜெகதீஸ்வரன் (நிர்வாக உறுப்பினர், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி) ரி.யோகராஜா (தேசிய அமைப்பாளர் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி), ஸ்ரீகேசவன் (இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்), எஸ்.இரவீந்திரன் (முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத் தலைவர்) வி.சசிகலா (முன்பள்ளி பிரதேச இணைப்பாளர்), கே.வேலாயுதபிள்ளை (முன்பள்ளி கட்டமைப்பு தலைவர்), ஏ.ஜெயவாணி (குடும்பநல உத்தியோகத்தர்), திருமதி மகேந்திரன் லோகேஸ்வரி (ஆற்றலரசி பனம் பொருள் உற்பத்தி நிலைய ஆசிரியர்) ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். அத்துடன் கிராம அபிவிருத்திச் சங்கம், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் ஆகியவற்றின் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்களும் பெருமளவு பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தார்கள். 

ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டு மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம் என்பன இடம்பெற்றதைத் தொடர்ந்து நிகழ்வின் பிரதம விருந்தினர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களினால் முன்பள்ளிக் கட்டிடம் திறந்துவைக்கப்பட்டது. தொடர்ந்து ஆசியுரை விருந்தினர்கள் உரை, பெற்றோர் உரை, கௌரவிப்பு நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன. அத்துடன் சிறார்களின் பல்வெறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்று பிள்ளைகளுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. 
நிகழ்ச்சி நிரலினை தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவரும், இளைஞர் கழகங்களின் வவுனியா மாவட்ட சம்மேளனத் தலைவருமான எஸ்.காண்டீபன் அவர்கள் தொகுத்து வழங்கியதோடு, இந்நிகழ்விற்கான நிதி அனுசரணையினை லண்டனில் வசிக்கும் தர்மலிங்கம் நாகராஜா (பொக்கன்) அவர்கள் வழங்கியிருந்தார். இதேவேளை வட மாகாணசபை உறுப்பினர்களான கந்தையா சிவநேசன், ஜி.ரி லிங்கநாதன் ஆகியோரது மாகாணசபை நிதியிலிருந்தும், லண்டனின் வசிக்கும் தர்மலிங்கம் நாகராஜா அவர்களின் நிதிப்பங்களிப்பிலும் மேற்படி முன்பள்ளிக்கான கட்டடம் கட்டப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.    
uma school 01 uma school 02 uma school 03 uma school 04 uma school 05 uma school 06 uma school 07 uma school 08 uma school 09 uma school 10 uma school 12 uma school 13 uma school 14 uma school 16 uma school 17 uma school 18 uma school 19 uma school 20 uma school 22 uma school 23 uma school 24 uma school 25 uma school 26 uma school 27 uma school 28 uma school 29 uma school 30 uma school 31 uma school 32 uma school 33 uma school 34 uma school 35 uma school 36 uma school 37 uma school 38 uma school 39 uma school 40 uma school 41 uma school 43 uma school 44 uma school 45 uma school 46 uma school 47 uma school 48 uma school 50 uma school 51 uma school 53