keppapula02கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள இராணுவத்தினர் அதனை விடுவித்து அந்நிலத்தில்  தாம் வாழ அனுமதிக்க வேண்டுமெனக்கோரி கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு இராணுவத்தலைமையக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக கூடாரம் அமைத்து இவர்களின் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இன்றுடன் 43 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு. 138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்க கோரி வருகின்றனர்
மேலும், தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் குறித்த முடிவை அரசியல் பிரமுகர்களுக்கு தெரிவிக்க இன்று 11.04.2017 அவர்களை தமது போராட்ட இடத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.சிலர் புறக்கணித்து செயல்பட்டிருந்த போதிலும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மாகாணசபை உறுப்பினர்கள் சிவநேசன், ரவிகரன் ஆகியோர் மட்டுமே பிரசன்னமாகி இருந்தனர்
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சகல பிரதிநித்துவ செயல்பாட்டை புறக்கணித்து மக்களுடன் இணைந்து போராடுமாறும். சகல தலைவர்களும் எதிர்வரும் நாட்களில் சந்திக்க வேண்டும் எனவும் போராட்டக்காரர்களால் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில் எதிர்வரும் 14 ஆம் திகதி சித்திரை வருடப்பிறப்பை கறுப்பு நாளாக அனுஸ்டிக்க தீர்மானித்துள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொது மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

keppapula01 keppapula02 keppapula03 keppapula04 keppapula05