mohanதமிழர்களின் நிரந்தரமான அரசியல் தீர்வு, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோர்களின் உண்மை நிலவரம், தமிழர்களின் பூர்வீக நிலங்களின் விடுவிப்பு நோக்கிய பயணத்தில் இவ் வருடம் மலரும் ஹேவிளம்பி புது வருடத்திலாவது எமக்கான தீர்வை நோக்கி பயணித்து மாற்றங்கள் நிகழுமா என எமது மக்களின் அபிலாசைகளின் மாற்றங்களுக்காக நாம் பயணிப்போம்.மாற்றங்கள் நிகழ வேண்டியது காலத்தின் தேவையாக கருதப்படுகிறது. மாற்றங்களின் ஊடாக நமது வெற்றிப்பயணத்தில் பயணிக்கும் நாம் ஒற்றுமையுடன் பயணிப்போம்.

‘எமது இனத்தின் ஒற்றுமையே எமது விடுதலையின் வெற்றி’

திரு க.சந்திரகுலசிங்கம்(புளொட் – மோகன்)
முன்னாள் உப நகர பிதா
 வவுனியா நகரசபை.