keppapula08கேப்பாப்புலவு மக்கள் இன்றைய தமிழ் சிங்கள புத்தாண்டை புறக்கணித்து கருப்பு ஆடை அணிந்து கழுமரம் ஏறி துக்கதினமாக அனுஸ்டித்தனர் இவர்களின் இந்த போராட்டத்தில் கௌரவ மாகாணசபை உறுப்பினர்களான கந்தையா சிவநேசன் மற்றும் ரவிகரனும் கலந்து கொண்டனர்.கேப்பாபுலவு கிராம மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள இராணுவத்தினர் அதனை விடுவித்து அந்நிலத்தில்  தாம் வாழ அனுமதிக்க வேண்டுமெனக்கோரி கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு இராணுவத்தலைமையக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக கூடாரம் அமைத்து இவர்களின் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 45 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு. 138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்க கோரி வருகின்றனர்.

keppapula02 keppapula03 keppapula04 keppapula05 keppapula06 keppapula07 keppapula08