இன்று வடமாகாணசபை உறுப்பினர் திரு கந்தையா சிவநேசன் , வன்னி மேம்பாட்டுப்பேரவை தலைவர் தவராசா ஆகிய இருவரும் முள்ளிவாய்க்கால் மேற்கு மற்றும் கிழக்கு பிரதேச மக்களை சந்தித்து அவர்களுடைய வாழ்வாதாரம் சம்பந்தமாகவும் மக்களின் பற்றாக்குறைகள் பற்றியும் அவற்றுக்கான தீர்வுகள் பற்றியும் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினர் இந்நிகழ்வுக்கு மகளிர் கிராம அபிவிருத்தி சங்க தலைவி கமலா மற்றும் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க உறுப்பினர் நகுலன் மற்றும் கிராம மக்களும் கலந்து கொண்டனர்.