parisபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் சாம்பஸ் எல்யஸ் பகுதியில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் பொலிஸாரை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொல்லப்பட்டு மேலும் ஒரு பொலிஸ் படுகாயமடைந்துள்ளார் இத் தாக்குதல் அப்பகுதியில் சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாக்குதலில் ஈடுபட்ட நபரை பொலிஸார் சுட்டுக் கொன்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.இதேவேளை, சாம்பஸ் எல்யஸ் பகுதியை பொலிஸார் தங்களது காட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.

இச்சம்பவத்தை கண்ட மக்கள் கூறுகையில் பொலிஸ் வாகனத்தை அணுகிய வாகனத்தில் இருந்து தானியங்கி துப்பாக்கி மூலம் சுடப்பட்டதாகவும் இருவர் இருந்ததாகவும் கூறப்படுகிறது இத் தகவலை பொலிஸ் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
 
ஞாயிற்றுக் கிழமை ஜனாதிபதி தேர்தல் முதல் சுற்று நடைபெறவுள்ள நிலையில் பாரிஸில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமையானது நாட்டு மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

புலனாய்வு துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.