Posted by plotenewseditor on 26 April 2017
Posted in செய்திகள்
முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவின் முத்தையன்கட்டுக்குளம் கிராம அலுவலர் பிரிவின் ஜீவநகர் கிராம மக்களுடன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் பொருளாளரும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான க. சிவநேசன் (பவன்) அவர்களின் சந்திப்பு ஒன்று நேற்று 25.04.2017 செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
கிராம அலுவலரின் காரியாலயத்தில் அவரது தலைமையில் இடம்பெற்ற இச் சந்திப்பில் கிராமத்தின் அவசிய தேவைகள், மற்றும் குறைபாடுகள் என்பன பற்றி விவாதிக்கப்பட்டன.
கணிசமானளவு பொதுமக்கள் கலந்து கொண்ட இந் நிகழ்வில், அக் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சார்ந்த அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரும் தமது கருத்துக்களை தெரிவித்ததோடு தேவைகளையும் வலியுறுத்தியிருந்தனர்.